காஞ்சிபுரத்தில் 12 நாள் நீச்சல் பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் அரசு நீச்சல் குளத்தில், 12 நாட்களுக்கான கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-05 01:32 GMT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில், அரசு நீச்சல் குளத்தில், 12 நாட்களுக்கான கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சி ஜூன் மாதம் வரை நடைபெற உள்ளது. 4 வயது முதல் அனைத்து வயதினரும் இதில் பங்கேற்கலாம். நேற்று துவங்கிய பயிற்சி, வரும் 14ம் தேதி வரையும், ஏப்.,16 முதல் 30 வரையும், மே 2 முதல் 15 வரையும், மே 16 முதல் மே 29 வரையும், மே 30 முதல் ஜூன் 12 வரையும் நடைபெறம். இப்பயிற்சிக்காக, 1,770 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் உயிர்காக்கும் கலையான நீச்சல் பயிற்சியை கற்று பயன் பெற வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News