2 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!
மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு;

வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவில் கடந்த மாதம் நடந்த பொங்கல் விழா தகராறில் வசந்தகுமார் என்பவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சிவா, கணேஷ் ஆகியோர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி மதிவாணன் பரிந்துரையின் பேரில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.