கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2023-11-04 05:32 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும் படியாக நின்று கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News