பூனைக்கண் அணைக்கட்டை சீரமைக்க கோரி 2 கிராம மக்கள் சாலை மறியல்

பூனைக்கண் அணைக்கட்டை சீரமைக்க கோரி 2 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-02 11:46 GMT
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேலச்சேரி கிராம மலைப்பகுதியில் பூனைக்கண் கால்வாய் உள்ளது. அங்கு அணைக்கட்டு ஏற்படுத்தப்பட்டு கிளை வாய்க் கால் மூலம் மேலச்சேரி, சிங்கவரம், செட்டிப்பா ளையம் பெரிய ஏரி, நாட்டேரி உள்ளிட்ட ஏரிக ளுக்கு தண்ணீர் செல்லும்.

மழைக்காலத்தில் மலைப்பகுதியில் இருந்து வரும் வெள்ளத்தால் பூனைக்கண் அணைக்கட்டு ஆண்டுதோறும் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கிளை வாய்க்காலும் தூர்ந்து போய் கிடக்கிறது. ஷட்டர்களும் சேதமடைந்துள்ளன.

பூனைக்கண் அணைக்கட்டு மற்றும் வாய்க் காலை சீரமைக்கக்கோரி மேலச்சேரி கிராம மக் கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து மேலச்சேரி மற்றும் சிங்கவரம் கிராம மக்கள் நேற்று காலையில் மேலச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் மேல்மலையனூர்-செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு செஞ்சி கோட்டை நீர் ஆதாரஅமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் மேல்மலையனூர் தாசில்தார் முகமது அலி, செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, பொதுப்ப ணித்துறை, வனத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், அணைக்கட்டு, ஷட்டர் மற்றும் வாய்க்காலை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து 2 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.) என்ற புதிய சட் டத்தின்படி 189(ii) (பழைய பிரிவு 143) -அனுமதி யின்றி 5-க்கும் மேற்பட்டோர் கூடுதல், 126(ii) (பழைய பிரிவு 341)-பொதுமக்கள் செல்லும்,

பொதுவான பாதையை வழிமறித்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News