20 நாட்களாக குடிநீர் இல்லை

சாலை மறியல் செய்த பொதுமக்கள்;

Update: 2025-08-13 15:31 GMT
கூடலூர் அருகே பொன்னூர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாநில போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது..... நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொன்னூர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பாதிப்படைந்த பொதுமக்கள் நெல்லியாலம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காளி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாலையின் இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கூடலூர் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News