24 டன் நிலக்கரியுடன் லாரியை கடத்திச் சென்ற டிரைவரை போலீசார் கைது
தூத்துக்குடி துறைமுகத்தில் 24 டன் நிலக்கரியுடன் லாரியை கடத்திச் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் 24 டன் நிலக்கரியுடன் லாரியை கடத்திச் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கூடுதல் தளத்தில் நிறுத்தியிருந்த ஆல்பா என்ற கப்பலில் இருந்து தனியார் ஷிப்பிங் நிறுவனம் மூலம் கடந்த 8ஆம் தேதி வாடகை லாரியில் 24 டன் நிலக்கரி அனுப்பி வைக்கப்டப்டது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 68ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் லாரியை கரி லோடுடன் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லாமல் டிரைவர் கடத்திச் செல்ல முயன்றுள்ளார். இதுகுறித்து அந்நிறுவனத்தின் போர்ட் ஆபரேஷன் மேனேஜர் ராஜா முகம்மது என்பவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்நிறுவன மேலாளர் ஜோசப் செல்வம் என்பவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி லாரி டிரைவர் ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, வீரன் சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சந்திரசேகரன் (28), என்பவரை கைது செய்தார். மேலும், 24 டன் நிலக்கரியுடன் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.