260 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் !!
ஆலங்குளத்தில் 260 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
By : King 24x7 Angel
Update: 2024-05-25 09:00 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன் படுத்திய வணிக நிறுவனங்களில் 260 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், குவளைகள் பயன்படுத்துவது குறித்து சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 3 மொத்த விற்பனையாளா்களிடமிருந்து 260 கிலோ நெகிழிப் பைகள் மற்றும் குவளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வில், ஆலங்குளம் பேரூராட்சி இளநிலை உதவியாளா் சங்கர சுப்பிரமணியன், வரித்தண்டலா் சந்திரசேகரன் மற்றும் பேரூராட்சிபணியாளா்கள் கலந்து கொண்டனா்.