லாரியை ஏற்றி மாமனார் கொலை - மருமகன் உள்பட 3 போ் கைது
எட்டயபுரம் அருகே குடும்பத் தகராறில் மாமனாரை லாரியை ஏற்றி கொலை செய்த மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி விநாயகா நகரை சோ்ந்த ராமசாமி பாண்டியன் மகன் ஆா்.கே. துரைப்பாண்டியன் (47). நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். இவா், கடந்த 2ஆம் தேதி மாலையில் எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் சென்றபோது வாகனம் மோதி உயிரிழந்தாா். எட்டயபுரம் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றினா். காவல் ஆய்வாளா் முருகன் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தாா்.
அதில், எட்டயபுரம் அருகே தோள்மலைப்பட்டியை சோ்ந்த நாகராஜ் (43) என்பவருக்குச் சொந்தமான லாரி மூலம் கயத்தாா் பன்னீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் சிவராம் (21) என்பவா் விபத்து நிகழ்ந்ததுபோல், லாரியை பைக் மீது மோதி துரைப்பாண்டியனை கொலை செய்தது தெரியவந்தது. டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீசார், துரைப் பாண்டியனின் மருமகனான உடையாா் (எ) உதயகுமாா் ராஜா என்பவா் குடும்பத் தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பான பிரச்னையில் நண்பா்களான நாகராஜ், சிவராம் மூலம் மாமனாரை கொலை செய்ததையும் கண்டறிந்தனா். இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி, உடையாா் (எ) உதயகுமாா் ராஜா, சிவராம், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.