பரமத்திவேலூரில் ரூ.39 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.39 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;

Update: 2025-01-29 14:08 GMT
பரமத்திவேலூர், ஜன. 29: பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறை முக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,787 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.47.50-க்கும். குறைந்தபட்சமாக ரூ.33.10-க்கும், சராசரியாக ரூ.45.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.76 ஆயிரத்து 539-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 745கிலோ தேங் காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.61.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ.37:29-க்கும், சராசரியாக ரூ.49.49 -க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.39 ஆயிரத்து 575-க்கு ஏலம் நடைபெற்றது.

Similar News