வெண்மணி தியாகிகளின் 55வது நினைவுதினம் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் வி.சி.க., சார்பில் வெண்மணி தியாகிகளின் 55வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-25 15:08 GMT

 மயிலாடுதுறையில் வி.சி.க., சார்பில் வெண்மணி தியாகிகளின் 55வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணி கிராமத்தில் கடந்த 1968-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கூலி உயர்வு கேட்டு விவசாய தொழிலாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள், குழந்தைகள் உள்பட 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து வைக்கப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் 55 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மோகன்குமார் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் வீரவணக்கம் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News