நரசிம்மர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.59 லட்சம் வசூல்!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூபாய் 59 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

Update: 2024-05-24 16:28 GMT

கோயில் காணிக்கை

ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், தக்கான் குளம் ஆஞ்சநேயர் கோவில் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 15-க்கும் மேற்ப்பட்ட உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி ரோப்கார் கட்டிட வளாகத்தில் கோவில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.

இதில் ரூ.59 லட்சத்து 8,000 ரொக்கம், 110 கிராம் தங்கம், 285 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கோவில் திருப்பணிக்காக வைக்கப்பட்ட ஒரு உண்டியலில் ரூ.43,295 இருந்தது.உண்டியல் காணிக்கை பணம் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Tags:    

Similar News