கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6பேர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 10:21 GMT
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6பேர்
நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஆவத்திபாளையம்,ஜனதா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பிரபு 41, பாலசுப்பிரமணி 51, சுஜித் 25, குமரகுரு 23, பூபதி 27 ,சிவா 19 ஆகிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். குமாரபாளையம் மார்க் நீதிமன்றத்தில் ஆறு பேரும் ஒப்படைக்கப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்..