60 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்த எருமை மாடு
வெல்லம்பட்டியில் 60 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்த எருமை மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்;
திண்டுக்கல் மாவட்டம் வெல்லம்பட்டி கிராமத்தில் உள்ள பழனிச்சாமி வயது 70 என்பவருக்கு சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள தொட்டியில் எருமை மாடு ஒன்று தவறி விழுந்து விட்டதாக வேடசந்தூர் தீயணைப்பு துறை இருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வேடசந்தூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் சரவணன் தலைமையில் ராஜகுபேரன், கருப்புதுரை, ராஜாராம், இராமன் ஆகிய வீரர்கள். விரைந்து வந்து பணியாளர்கள் உள்ளே இறங்கி கிரேன் உதவியுடன் எருமை மாட்டினை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.