67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்.
67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றுவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.;
அரியலூர், செப்.26- 67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் நிலத்தை விட்டு விவசாயிகளைவெளியேற்ற முயற்சிக்கும் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் இலந்தகுடம் கிராமத்தில் விவசாயிகள் 67 ஆண்டுகளாக சுமார் 85 ஏக்கர் நிலத்தில் 82 விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்து வரும் நிலத்தை நீர்நிலை புறம்போக்கு என காரணம் காட்டி நிலத்தை விட்டு விவசாயிகளை வெளியேற்றுவதற்கான முயற்சியில் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் இதற்காக புல்டோசர் எந்திரங்களைக் கொண்டு வந்தும் காவல்துறையை வைத்தும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர் இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ.வி.நாகராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, ஒன்றிய செயலாளர் எஸ்.பி.சாமிதுரை மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சரோஜினி ஆகியோர் நேரடியாக சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விவசாயிகள் 85 ஏக்கர் நிலத்தில் 82 பேர் 67 ஆண்டுகளாக நாங்கள் நெல் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருவதாகவும், திருமானூர் ஒன்றிய நிர்வாகம் காவல்துறையை வைத்து தங்களை மிரட்டுவதாகவும், நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அச்சுறுத்துவதாகவும் எங்களுக்கு விவசாயத்தை தவிர வேறு தொழில் ஏதும் தெரியாது விவசாயத்தை நம்பியே நாங்கள் உள்ளதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.அருணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய, மாநில குழுவின் முடிவுகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ வி நாகராஜன் விளக்கிப் பேசினார். கூட்டத்தில் எதிர்கால செயல் திட்டம் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையினை முன் வைத்து மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் மாவட்ட குழு கூட்டத்தில் விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் இலந்தகுடம் கிராமத்தில் நீர்நிலை பொறம்போக்கு என கறி விவசுயிகளை விவசாய நிலத்திலிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் அதிஙாரிகளை கண்டித்து மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து 67 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருபவர்களை நிலத்திலிருந்து வெளியேற்றுவது சட்டப்படி குற்றமாகும், அது முறையா? என முறையிடுவது, அதையும் தாண்டி அவர்கள் நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதற்கு முயற்சித்தால் அந்த பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அதனை எதிர்த்து கடுமையாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்று மாவட்ட குழு முடிவு செய்துள்ளது எனவே விவசாயிகளை அச்சுறுத்தும் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு விவசாயிகளை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும். மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.