7அடி சுவர் இடிந்து விழுந்து 5வயது சிறுமி பலி

மயிலாடுதுறை அருகே  ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி   திட்டத்தின் கீழ் கட்டிவரும் வீடு   சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி பலி ;

Update: 2025-07-23 18:43 GMT
மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில்  காமராஜர் - சரண்யா  தம்பதியினருக்காக ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும்  வீட்டின் 7அடி  சுவர் இடிந்து விழுந்ததில் அங்கே  விளையாடிக் கொண்டிருந்த காமராஜர் மகள் சஹானா ஸ்ரீ(5) இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடினார். அவரை மீட்ட பொதுமக்கள் காளி ஆரம்ப சுகாதாரத்தை கொண்டு சென்றனர் அங்கே மருத்துவர் இல்லாததால் 108 ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்தனர். அதகற்குள் சிறுமி உயிர் இழந்து விட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும்.  108 ஆம்புலன்ஸ் சேவையை  துவக்க வேண்டும் இறந்து போன சிறுமியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ‌மணல்மேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உத்தரவாதம் அளித்ததன் பேரில் சிறுமியின் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த  மறியலால் மணல்மேடு திருமங்கலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News