சந்தன மரம் வெட்டி கடத்திய 7 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே சந்தன மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த பெல்லவாரி கண்டிகை பகுதியில், லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டு தோட்டத்தில், கடந்த 15 ஆண்டுகளாக சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தோட்டத்தில் இருந்த நான்கு சந்தன மரங்கள், சில நாட்களுக்கு முன் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், மேலும் இரண்டு மரங்களை வெட்டிக் கடத்த திட்டமிட்ட நிலையில், மரம் வெட்டிய கும்பலை ஆர்.கே.பேட்டை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ராம்ராஜ், 22, ராஜா, 46, மணிகண்டன், 26, பெருமாள், 46, மற்றும் ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்த விஜயகுமார், 43, ஜெயபாரதி, 42, சிட்டிபாபு, 20, என தெரிந்தது. இந்த கும்பலிடம் இருந்து, 30 கிலோ சந்தன மர துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழு பேரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.