போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு!
காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-02-23 04:20 GMT
வழக்கு பதிவு!
கோவை:கடந்த 21ஆம் தேதி கேரளா கிளப் சாலையில் போக்குவரத்து காவலர் விஜயகுமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த TN 66 R 2499 என்ற எண் கொண்ட ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்த ஓட்டுனர் லோகநாதன் என்பவரை நிறுத்தி தணிக்கை செய்ய முயற்சித்தார்.ஆனால் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக சென்றதை தொடர்ந்து அருகில் பணியில் இருந்த போக்குவரத்து காவலருக்கு தகவல் அளித்து ஆட்டோவை துரத்தி சென்று வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு உள்ளார்.ஆட்டோ ஓட்டுனர் லோகநாதனிடம் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை கேட்ட நிலையில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துது. இது தொடர்பாக காவலர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஆபாச வார்த்தைகளில் திட்டி காவலர் விஜயகுமாரை தாக்கியுள்ளார்.இந்த நிலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.