திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளியை தாக்கிய மூன்றுபேர் மீது வழக்கு
திருப்பத்தூர் அடுத்த மாக்கனுார் கிராமத்தில் கூலி தொழிலாளியை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாக்கனுார் கிராமத்தில் கூலி தொழிலாளியை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மாக்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி(36).
இவரது உறவினரான மகேந்திரன் என்பவர், நேற்று அப்பகுதியில் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் என்பவரின் மகன்கள் அன்பரசன், இளையரசன், சிலம்பரசன் ஆகியோர் மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த மூவரும் சேர்ந்து மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திருப்பதி இன்று கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் சகோதரர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.