வேனை பறித்து சென்ற 3 பேர் மீது வழக்கு பதிவு

கரூர் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஓட்டுனரை தாக்கி வேனை எடுத்து சென்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-01-14 02:37 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம் பி குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி 21. வேன் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 26-ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலி மங்கலம் பிரிவில் வேலை நிறுத்திவிட்டு அப்பகுதியில் நின்று இருந்தார் அப்போது அங்கு வந்த, கரூர் மாவட்டம், புகலூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார், ராஜா தெற்கு புகலூர், முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர், பெரியசாமியிடம் வேன் உரிமையாளர் சருக மணி என்பவர் வாங்கிய பணத்தை தரவில்லை எனக் கூறி, டிரைவர் பெரியசாமியை தாக்கிவிட்டு வேனை எடுத்து சென்றனர். இது தொடர்பாக டிரைவர் பெரியசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் விசாரணையின் முடிவில் மூன்று பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News