ஆவுடையாபுரத்தில் பெண் உட்பட மூவரை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு@
விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியில் பெண் உட்பட மூவரை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் மன்னார்கோட்டை பகுதியைச் சார்ந்தவர் காளீஸ்வரன் இவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும் கடந்த 16ஆம் தேதி அதே பகுதியில் நடந்த அஜித் பாண்டி உள்ளிட்ட சிலர் அவரது தந்தையிடம் தகராறு ஈடுபடுவதாக அறிந்து மன்னார்கோட்டில் உள்ள சிவன் கோவில் அருகே சென்றதாகவும் அங்கு இருந்த அஜித் பாண்டி மகேஸ்வரன் வேல்பாண்டி கதிரேசன் மகேஷ் ஆகிய ஐந்து நபர்களும் காளீஸ்வரன் மற்றும் அவருடைய உறவினரான முத்துலட்சுமி வாழவந்தான் ஆகிய மூவரையும் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த மூவரும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி காளீஸ்வரன் அளித்த புகார் அடிப்படையில் பச்சை காரப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்