முசிறி அருகே இளம் பெண்ணை துன்புறுத்திய மூவர் மீது வழக்கு பதிவு
முசிறி அருகே நகையைத் திருடியதாக சந்தேகித்து 3 நாட்கள் இளம் பெண்ணை அடைத்து வைத்து துன்புறுத்திய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி, சேர்குடி பகுதியில் உள்ள மேலதெருவை சேர்ந்தவர் நீலேஷ் மனைவி ஜெயஸ்ரீ வயது 21. இவர் தற்போது கரூர் அடுத்த தெற்கு காந்தி கிராமம், ஐயப்பன் கோவில் பகுதியில் வசித்து வருகிறார்.
கரூரில், எஸ் எஸ் டான்ஸ் அகாடமி என்ற பெயரில் டான்ஸ் குழுவை நடத்தி வருபவர் மதியழகன். இந்த குழுவில் ஜெயஸ்ரீ ஒருவராக இருந்தார். இந்த குழுவில் பிரவீன் மற்றும் ப்ரீத்தி ஆகிய இருவரும் உள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 17ஆம் தேதி, மதியழகனின் 2 பவுன் தங்க நகையை ஜெயஸ்ரீ களவாடிவிட்டதாக கூறி, ஜெயஸ்ரீயை மதியழகன், பிரவீன், ப்ரீத்தி ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு தடியால் தாக்கி, 3- நாள் வரை அடைத்து வைத்து, துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ, இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக மதியழகன், பிரவீன், பிரீத்தி ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.