அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் !
கெங்கவல்லி அருகே மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர்துரை ரமேஷ் தலைமை வகித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-18 06:13 GMT
கெங்கவல்லி
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லிவட்டம் கெங்கவல்லி அருகே, பச்சமலை ஊராட்சி ஓடைக்காட்டுபு தூர் குக்கிராமங்களில், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கெங்கவல்லி மேற்கு ஒன்றிய செயலாளர்துரை ரமேஷ் தலைமை வகித்தார். பச்சமலை ஊராட்சி கிளை செயலாளர் முன் னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கெங்கவல்லி சட்டமன்றதொகுதியில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.இதில், கொப்பம்பட்டி ஒன்றிய கவுன்சிலர்ராஜேந் திரன், ஒன்றிய பொரு ளாளர் மணி, அக்பர், பரமசிவம், சுரேஷ்குமார். மகேஸ்வரி, பரமேஸ்வரி, ஆறுமுகம், சீனிவாசன், பொண்ணுசாமி, ராம சாமி, ரமேஷ், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.