மாணவர் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து!
திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவன் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
Update: 2024-05-21 07:35 GMT
திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் சையது (18) ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். விபத்து குறித்து வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.