விபத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி பெண் பத்திரமாக மீட்பு

பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார்

Update: 2024-01-08 12:01 GMT

பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டார்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் சாலைக்கு, சுமார் 200 கோடி மதிப்பில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டு வருகிறது. மேலும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை, சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து ஈரோடு சென்ற S1 என்ற அரசு பேருந்து, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் பேருந்தை ஓட்டுநர் இயக்க முற்பட்டதை அறியாமல், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, அவர் பேருந்தின் அடியில் மாற்றுத்திறனாளி பின் சிக்கியதை அறிந்த பேருந்து ஓட்டுனர், உடனடியாக பேருந்தினை நிறுத்தியதால், அவர் காயம் ஏதுமின்றி தப்பித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணை உடனடியாக பேருந்து அடியில் இருந்து மீட்டு அவரை ஆசுவாசப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினை அவ்வழியாகச் சென்ற கார் ஒன்றின் டேஷ் கேமராவில் பதிவான காட்சிகளை இணையதளங்களில் பரவியதால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Tags:    

Similar News