கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி திருச்சியில் கைது

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-15 01:27 GMT

சோமசுந்தரம்

திருச்சியில் கடந்த ஆண்டு வண்ணாரப்பேட்டை வாசு என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .இதில் ஏழாம் குற்றவாளியான நாகசுந்தரம் என்பவரது மகன் சோமசுந்தரம், வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார் . இதனைத் தொடர்ந்து திருச்சி அமர்வு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியன்று சோமசுந்தரத்தை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. போலீசார் அவரை தேடிவந்த வந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் அங்கு வந்த ரவுடி சோமசுந்தரத்தை மடக்கி பிடித்தனர் . இதைத்தொடர்ந்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News