1ஆம் வகுப்பு மாணவனை தாக்கிய தந்தை: போலீசார் விசாரணை

கோட்டபாளையம் பெராங்காடு பகுதியில், தேர்விற்கு படிக்கவில்லையெனகூறி, ஒன்றாம் வகுப்பு மாணவனை தாக்கிய தந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-05 13:23 GMT

காயமடைந்த சிறுவன்

மல்லசமுத்திரம் ஒன்றியம், கோட்டபாளையம் கிராமம், பெராங்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திக்30, சுகன்யா28. தம்பதியினர். இவர்களது மூத்தமகன் தக்‌ஷன்6. கோட்டபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்றுமுன்தினம் மாலை 5மணியளவில், பள்ளியை முடித்து வீடுதிரும்பிய சிறுவன் தக்‌ஷன் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். தந்தை கார்த்திக் அழைத்து தேர்விற்கு ஏன் படிக்கவில்லையெனகூறி, அருகிலிருந்த தடியை எடுத்து முதுகில் பலமாக தாக்கியுள்ளார்.

வலியை தாங்க முடியாத சிறுவன் தக்‌ஷன் கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டனர். முதுகில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. மக்கள் 1035என்ற சைல்டு லைன் ெஹல்ப் லைனிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அலுவலர் மோகனசெல்வி சிறுவனை மீட்டு, மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக, சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மல்லசமுத்திரம் போலீசார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News