வாக்குச்சாவடிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் வாக்குச்சாவடிகள் பிரிப்பது குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-16 06:54 GMT
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் 1500 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து துணை வாக்குச்சாவடி உருவாக்குவது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் பனன்குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் மற்றும் தொடர்புடையய அலுவலர்கள் உள்ளனர்.