எடப்பாடி அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குட ஊர்வலம்...
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம்,ஆவணி பேரூர் மேல்முக கிராமம் நாச்சிபாளையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன்,அருள்மிகு ஸ்ரீ மேச்சேரி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனரவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் குடம் எடுத்து வந்தனர். இந்த ஊர்வலம் ஜலகண்டபுரம் முக்கிய சாலை வழியான ஆவணியூர் மேல்முகம், நாச்சிபாளையம் வழியாக 20க்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள்,நாட்டிய குதிரைகள், என அணிவகுக்க பம்பை வாத்தியம்,கேரளா சண்டி மேளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தது.கோவில் வளாகத்தில் மேளதாளத்துக்கு தகுந்தவாறு வெள்ளை குதிரை நாட்டியம் ஆடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.