குடிநீர் பைப்புகளை சீரமைக்க தோண்டிய பள்ளங்களால் தொடர்  விபத்து 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் பைப்புகளுக்காக தோண்டிய பள்ளங்களால் தொடர் விபத்து ஏற்பட்டது.

Update: 2024-06-02 11:22 GMT

விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுயில் குடிநீர் குழாய்கள் அமைக்க, பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகள் அடிக்கடி உடைக்கப்பட்டு சீரமைக்கும் பணிகள் செய்யப்படுகிறது. மாநகரின் பல பகுதிகளிலும் இரவு நேரங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் மண் போட்டு நிரப்பி வைக்கப்படுகிறது .

இதனால் சில மணி நேரங்களில் அந்த இடத்தில் மண் பெயர்ந்து மீண்டும் பள்ளம் உருவாகிறது. சாலையில் திடீர் திடீரென பள்ளங்கள் தோண்டப்பட்ட இடங்களில் பின்னர் எந்த வித எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைப்பதில்லை. இதனால் வாகனங்கள் அந்த பள்ளங்களில் சிக்கி வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு பட்ட கிறிஸ்து நகர், வாட்டர் டேங்க் ரோடு சந்திப்பில் நேற்று காலையில் பாரம் ஏற்றி சென்ற மினி லாரி அந்தப் பகுதியில் குடிநீர் குழாய்க்காக தோண்டி சீரமைக்கப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. அ

தனை அதன் டிரைவர் மிகுந்த சிரமத்திற்கு பின்னர் மீட்டார். ஆனால் மதிய வேளையில் அதே இடத்தில் மீண்டும் மற்றொரு லாரியும் சிக்கியது. இதனை போன்று அனைத்து பகுதிகளிலும் இந்த நிலை காணப்படுவதால் மாநகராட்சி ஆணையளரும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளது.

Tags:    

Similar News