மதுரையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்
மதுரையில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-03-28 12:56 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவகைக் கூட்டரங்கில் இன்று (28.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா தலைமையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் (General Observer) திருராஜேஷ் குமார் யாதவ்,
மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கான காவல் பார்வையாளர் (Police Observer) திருரோகன் பிகனாய், ஆகியோர் முன்னிலையில் மதுரை மாவட்டத்தில் தேர்தல் வாக்குப் பதிவிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.