மேலூர் கிளை சிறையில் திடீர் ஆய்வு

மேலூர் கிளை சிறைச்சாலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-05-08 01:43 GMT

மேலூர் கிளை சிறையில் திடீர் ஆய்வு

மதுரை மாவட்டம், மேலூர் கிளை சிறைச்சாலை 1918 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு கண்ட இந்த கிளை சிறைச்சாலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவகடாட்சம், மாவட்ட முதலாவது நீதிமன்ற நீதிபதி தமிழரசி, மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சிறைச்சாலையில் சிறைவாசிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் சிறைச்சாலை கட்டமைப்பு குறித்து உச்சநீதிமன்ற ஆலோசனைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த ஆய்வின் அறிக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்தார். மேலும், மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மத்திய சிறைச்சாலை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குழுவின் அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அப்போது தகவல் தெரிவித்தார். உயர் அதிகாரிகளின் திடீர் ஆய்வையடுத்து, மேலூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் திடீர் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News