திண்டுக்கல் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Update: 2023-11-15 08:35 GMT

தற்கொலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகு சமுத்திரபட்டியை சேர்ந்தவர் மணிவேல். மில் தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (35). இவரும் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை சர்மிளா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News