தொப்பூரில் வேன் மீது மோதி விபத்து

அரசு பஸ் டிரைவர் பணி இடைநீக்கம்

Update: 2024-06-15 04:38 GMT

 பணி இடைநீக்கம்

தர்மபுரியில் இருந்து நேற்று காலை தொப்பூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. தொப்பூர்-சேலம் ரோட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் வாகனங்கள் மெதுவாக சென்றது. அப்போது, அரசு டவுன் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து பிரேக் பழுதானதால் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. இதை அறிந்த சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அங்கு சென்று விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், விபத்தில் சிக்கிய டவுன் பஸ்சில் பிரேக் பழுது ஆகவில்லை என்றும், டிரைவரின் கவன குறைவால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து டவுன் பஸ் டிரைவர் லோகநாதனை பணி இடைநீக்கம் செய்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி நேற்று உத்தரவிட்டுள்ளார். அரசு டவுன் பஸ்கள் மற்றும் தொலைதூர பஸ்கள் வேகமாக இயக்கக்கூடாது. பாதுகாப்பாக இயக்க வேண்டும். குறிப்பாக விபத்து இல்லாமல் பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
Tags:    

Similar News