வந்தவாசி அருகே விபத்து - ஒருவர் பலி!
வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.;
Update: 2024-04-02 16:04 GMT
பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் புதிய காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(48). இவர் துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.