மாநில கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை - ஆட்சியர் பூங்கொடி
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணைய தளம் www.skilltraining.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-05-14 06:49 GMT
ஆட்சியர் பூங்கொடி
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.