வீட்டில் இருந்தபடியே ஊதியம் - அதிமுக கலகலப்பு பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் வீட்டிலிருந்தே நூறு நாள் பணிக்கான ஊதியத்தை பெறலாம் என கூறி பெண்கள் மத்தியில் கலகலப்பாக பேசி கிராம மக்களிடையே வேட்பாளர் ராஜசேகர் மற்றும் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஆகியோர் வாக்குகளை சேகரித்தனர்;

Update: 2024-04-03 02:57 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் களக்காட்டூர் ராஜூ தலைமையில் நேற்று  30 கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரித்தல் நிகழ்வு நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் , அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டனர். வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் வாக்குகள் சேகரித்து வந்த நிலையில் களக்காட்டூர் பகுதியில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும் வேட்பாளரை வரவேற்றனர்.

Advertisement

அதிமுக வேட்பாளர் ராஜசேகர் மூத்த குடிமக்கள் காலில் விழுந்து வாக்குகள் சேகரித்தார். இதைத் தொடர்ந்து குருவி மலை பகுதியில் வாக்குகள் சேகரித்து பேசிய முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் , தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும், தற்போது திமுக இந்த திட்டத்திற்கான பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கவில்லை எனவும், அதிமுக வெற்றி பெற்றால் 100 நாள் வேலை வாய்ப்பு பயனாளிகள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம் , மேலும் வீட்டில் இருந்து அதற்கான ஊதியத்தை பெறலாம் எனவும் தெரிவித்ததால் பெண்கள் அனைவரும் சிறிது நேரம் கலகலப்பான மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News