சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு ஏ.டி.எஸ்.பி பாராட்டு

Update: 2023-11-20 02:02 GMT

பாராட்டு சான்றிதழ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட காவல்துறையில் தொடர்ந்து 25 ஆண்டுகள் எவ்வித புகாரும் இல்லாமல் பணியாற்றி வரும் போலீசாருக்கு, பாராட்டு சான்று வழங்கி கவுரவிப்பது வழக்கம். தற்போது குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்,எஸ்,ஐ.க்களாக பணியாற்றி வரும் அமல்ராஜ், இளமுருகன் ஆகியோருக்கு, 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியமைக்காக நாமக்கல் ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் டேவிட், சந்தியா, தங்கவடிவேல், முருகேசன், குணசேகரன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், சீனிவாசன், செல்வி  உள்பட பலர் பாராட்டினர்.
Tags:    

Similar News