விவசாய தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் - 300 பேர் கைது

திருப்பத்தூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-16 08:30 GMT

திருப்பத்தூர் தனியார் வங்கி முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் சிஐடியூசி கேசவன், எல்பிஎப் மாவட்ட தொழிற்சங்க அண்ணா அமைப்பாளர் தேவராஜ், ஏஐடியுசி கன்வீனர் வேணுகோபால், ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டம் மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து. புதிய வேலை வாய்ப்பை உருவாக்கு. காலி பணியிடங்களை நிரப்பு. கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றை தனியார் மயமாக்காதே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே மின்சார சட்டத்தை திருத்தாதே தனியார் மயமாக்காதே வாகன ஓட்டிகளை பாதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூரில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என கலந்து கொண்டனர் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News