விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 06:17 GMT
அதிமுக
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேட்பாளர் கருப்பையாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியபோது, திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை பம்பரம் சுத்த போவதில்லை, குக்கர் விசில் அடிக்க போவதில்லை, இரட்டை இலை தான் வெற்றியை காணப் போகிறது. நமது வேட்பாளர் இளம் சிங்கம், ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு. அந்த அளவுக்கு துடிப்பான வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தியுள்ளோம். எனவே இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறப் போவது உறுதி என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.