ஆலங்குடி போராட்டம் ஒத்திவைப்பு

ஆலங்குடியில் சுற்றுச்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரி பேச்சு வார்த்தையால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2024-03-07 12:46 GMT

பேச்சுவார்த்தை 

துக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஆலங்குடி நகரின் புறநகர் பகுதிகளான கல்லாலங்குடி, கரும்பிரான்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் வழியாக புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆய்வுகள் செய்யப்பட்டு சாலை அமைய இருக்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

ஆனால், அந்தச் சாலை விளைநிலங்கள் வழியாக வருவதைக் கண்டித்து ஏற்கனவே அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருந்த நிலையில், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்னதாக போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பும் வெளியிட்டனர்.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் அரசு சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஆலங்குடி வட்டாட்சியர் பெரியநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் புதுக்கோட்டை கோட்டப் பொறியாளர் மற்றும் ஆலங்குடி உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், 50 பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கூறும் இரண்டு மாற்று ஆய்வு செய்து சாத்தியமுள்ள வழித்தடங்களில் புறவழிச்சாலையை அமைத்துக் கொள்வது எனவும், அதுகுறித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே கோட்டப் பொறியாளர் விரைவில் ஆய்வு மேற்கொள்வது எனவும் முடிவு எட்டப்பட்டது. இந்த சுமூக முடிவின் காரணமாக அடுத்த வாரம் நடைபெற இருந்த போராட்டம் இரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News