சொந்த வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதாக குற்றசாட்டு
தேர்தல் பணிகளுக்கு சொந்த வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்துவதாக கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுநாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முறையாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் வாகனங்களை சோதனை செய்வதற்காக மாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
36 வாடகை வாகனங்களின் மூலம் அதிகாரிகள் பணியாற்ற உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் நிலையில் அவர்களுக்கு முதற்கட்டமாக 24 வாடகை வாகனங்கள் கேமராக்கள் பொருத்தி தேர்தல் பணிக்காக பயன்படுத்துவதாக கூறப்படும் நிலையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சொந்த பயன்பாட்டு வாகனத்தில் சிசிடிவிகள் பொருத்தப்பட்டு தேர்தல் பணிக்காக செல்வதற்கு தயார் நிலையில் இருந்த வாகனத்தை இயக்கக் கூடாது என சிவகங்கை நகர் பகுதியில் உள்ள வாடகை கார் ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கனிடம் கேட்டபோது: அந்த வாகனம் டெமோ வாகனம் எனவும் அதனை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார். எனினும் சொந்த பயன்பாட்டு வாகனத்தை தேர்தல் பணிக்கு எவ்வாறு அனுப்பியது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வாடகை கார் ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் துவங்கப்பட உள்ள நிலையில் ஆரம்பகட்டத்திலேயே தேர்தல் விதிமுறைகளை தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது