பஸ்ஸில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதிக்கு பஸ்ஸில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
Update: 2024-03-06 07:03 GMT
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதிக்கு அரசு பஸ் வந்தது. பஸ்ஸில் டிரைவராக சந்திரசேகரன் கண்டக்டராக சுந்தர் ஆகியோர் பணியாற்றினர். பஸ் குழிப்பிறை வந்ததும் முதியவர் ஒருவர் ஏறி பொன்னமராவதி செல்ல பயணச்சீட்டு வாங்கினார். சீட்டில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயங்கி சாய்ந்தார். அருகில் இருந்த பயணிகள் முதியவர் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர். ஆனால் எந்த சலனமும் இல்லாததால் டிரைவர் சந்திரசேகர் வேகமாக பஸ்ஸை ஓட்டி சென்று அருகிலுள்ள வெங்கமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தினார் முதியவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் செந்துரையைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பதும் குழிப்பிறையில் உள்ள அண்ணன் வீட்டுக்கு வந்திருந்ததும் மாரடைப்பால் உயிரிழந்ததும் ஏற்கனவே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.