பழமையான ஆழ்வார் உலோக சிலை மீட்பு

திருவாரூர் அருகே பெருமாளகரம் கிராமத்தில் பழமையான ஆழ்வார் உலோக சிலை மற்றும் திருவிளக்கு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2024-03-09 00:46 GMT

திருவாரூர் அருகே பெருமாளகரம் கிராமத்தில் பழமையான ஆழ்வார் உலோக சிலை மற்றும் திருவிளக்கு கண்டெடுக்கப்பட்டது.


திருவாரூர் அருகே பெருமாளகரம் கிராமத்தில் வேணுகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. கோவில் வீதியில் உள்ள மாரிமுத்து தனது இடத்தில் புது வீடு கட்ட அஸ்திவாரத்திற்காக இன்று பள்ளம் தோண்டியபோது உலோக சிலை இருப்பது தெரியவந்தது முழுமையாக தோண்டியபோது சுமார் 2 அடி உயர ஆழ்வார் உலோகச்சிலை மற்றும் திருவிளக்கு கண்டெடுக்கப்பட்டது. இதை அடுத்து ஊராட்சி தலைவர் பாலாஜி மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் சிலையை மீட்டு வருவாய்த்துறையினரிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News