தென்காசியில் அண்ணாமலை பிரச்சாரத் தேதி அறிவிப்பு

வருகின்ற 4ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தென்காசியில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-27 02:30 GMT
தென்காசியில் அண்ணாமலை பிரச்சாரத் தேதி அறிவிப்பு
தென்காசி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியில் உள்ள ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 4-ம் தேதி வியாழக்கிழமை தென்காசி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாகவே பிரச்சார ஏற்பாடுகளை பாரதி ஜனதா கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News