அரிசிப்பாளையம் குழந்தை இயேசுபேராலயத்தில் ஆண்டு பெருவிழா

சேலம் அரிசிப்பாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் 33ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2024-01-07 09:36 GMT

ஆண்டுவிழா தொடக்கம்

சேலம் அரிசிப்பாளையம் குழந்தை இயேசு பேராலயம் 33 ஆம் ஆண்டு பேராலயப் பெருவிழா நேற்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. முன்னாள் ஆயர் சிங்கராயன் பெருவிழா கொடியேற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையிலும், நாளை 7-ந் தேதி தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையிலும், 8-ந் தேதி மரியபுரம் பங்கு தந்தை ராபர்ட் தலைமையிலும், 9 மற்றும் 10-ந் தேதிகளில் பெட்டவாய்த்தலை இருதய ஆண்டவர் ஆலயம் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையிலும், 11-ந் தேதி கூட்டாத்துப்பட்டி பங்கு தந்தை கிறிஸ்டோபர் தலைமையிலும்,12, 13-ந் தேதி உடையாப்பட்டி பங்குதந்தை ஆஸ்டின் ஜாய் தலைமையிலும், 14-ந் தேதி பெங்களூர் பாப்பிரை குருமடம் பேராசிரியர் டேவிட் ஸ்டேன்லி குமார் தலைமையிலும் நவநாள் திருப்பலி நடக்கிறது.

Advertisement

15-ந்தேதி 6 மணிக்கு சேலம் சமூக சேவை சங்கம் இயக்குநர் டேவிட் தலைமையில் திருப்பலியும், 7 மணிக்கு சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடக்கிறது. சேலம் மறைவட்ட முதன்மை குரு அழகு செல்வம் தலைமையில் 7.15 மணிக்கு தேர் மந்திரிப்பு நடக்கிறது.

குழந்தை இயேசு பேராலயம் உதவிப் பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. குழந்தை இயேசு பேராலயம் பங்கு தந்தை ஜோசப் லாசர் 9.30 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News