பட்டா மாற்றத்திற்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

பட்டா மாற்றம் தொடர்பாக இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-30 06:20 GMT

ஆட்சியர் சுப்புலெட்சுமி

வேலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலமாக இணைய வழி பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு மாற்றம் தொடர்பான மனுக்களை விண்ணப்பம் செய்யலாம். இதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள், மகளிர் திட்டம் மூலம் அனுமதி வழங்கப்பட்ட சுமார் 144 இ-சேவை மையங்கள் இயங்கி வருகிறது. எனவே பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள இ-சேவை மையங்களிலேயே பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளலாம். பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் இ-சேவை மையத்தை மட்டும் நாட வேண்டிய அவசியம் இல்லை என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News