அரசு ஒதுக்கீட்டு இட மாநில கலந்தாய்வுக்கு விண்ணப்பம்

திண்டுக்கல் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு இணையவழியில் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-15 06:05 GMT

ஆட்சியர் பூங்கொடி 

தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சோ்க்கைக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-யை கடன் அட்டை, பற்று அட்டை, இணையதள வங்கிப் பரிவா்த்தனை, ஜி-பே மூலம் செலுத்தலாம். விண்ணப்பங்களை 7.6.2024-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.

Tags:    

Similar News