சமூக சேவகிக்கு அறம் விருது
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சமூக சேவகிக்கு அறம் விருது வழங்கப்பட்டது.;
அறம் விருது
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் உள்ள லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பின் நிறுவனர் பூங்கொடி, ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பாடங்கள் கற்பித்தல், ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவித் தொகை, வழங்குதல், யோகா பயிற்சி வழங்குதல்,ஓவியப் பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி, சென்னை அறம் அமைப்பினர் சார்பில் அறம் சேவை விருதுக்கு பூங்கொடி தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்த விருதினை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம், திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் பூங்கொடியின் தாயார் மல்லிகாவிடம் வழங்கினர். விருது பெற்ற பூங்கொடியை முக்கிய பிரமுகர்கள், பொதுநல ஆர்வலர்கள் பாராட்டினர்.