கட்டிட மேஸ்திரி தற்கொலை

தர்மபுரி மாவட்டம், சோளியானூர் பகுதியில் வயிற்று வலியால் கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-27 03:35 GMT

தற்கொலை

தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்றத் தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட தொப்பூர் அருகே சோளியானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சிவா கட்டிட மேஸ்திரி. இவர் வயிற்று வலி காரணமாக, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இதனிடையே நேற்று வயிற்றுவலி அதிகமானதால், வலி தாங்க முடியாமல் சிவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தொப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின். உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News