ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-20 15:53 GMT
அர்ஜுனன் தபசு ஏறும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த உற்சவ திருவிழாவையொட்டி மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கர்ணன் பிறப்பு, கிருஷ்ணர் ஜனனம், தர்மர் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது .
இதனைத் தொடர்ந்து அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.